இதையடுத்து அவரை தனியாக அழைத்து சென்று அவரது உடைமைகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அந்த பயணி தொடைப்பகுதியில் போட்டிருந்த ‘ நீ கேப்பில்’ பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்ததும், மேலும் அவரது உடைமைகளில் துணிகளுக்கு நடுவில் தங்க சங்கிலிகளை மறைத்து எடுத்து வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அந்த பயணியிடம் இருந்து தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவ்வாறு பேஸ்ட் வடிவிலான 1317.500 கிராம் தங்கம் மற்றும் 106 கிராம் தங்க செயின் என 1 கிலோ 423 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டது. இதன் சர்வதேச மதிப்பு 1 கோடியே 3 லட்சத்து 13 ஆயிரத்து 257 ரூபாய் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக அந்த பயணியிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது
The post நூதன முறையில் கடத்திய ரூ.1 கோடி தங்கம் பறிமுதல் appeared first on Dinakaran.