சென்னை: கேரள கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளது. மேலும் தெற்கு கடலோர ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நேற்று லேசானது முதல் மிதமான மழை பெய்த நிலையில், பிற பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.
இன்றைய நிலவரப்படி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது. பிற பகுதிகளில் இன்று வறண்ட வானிலை நிலவும் வாய்ப்புள்ளது. இரவு அதிகாலை நேரங்களில் ஓரிரு இடங்களில் பனி மூட்டம் காணப்படும். இதே நிலை நாளையும் நீடிக்கும். மேலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டம் மற்றும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இரவு மற்றும் அதிகாலையில் உறைபனி இருக்கும். சென்னையிலும் இரவு மற்றும் அதிகாலை நேரத்தில் ஓரிரு இடங்களில் லேசான பனி மூட்டம் காணப்படும்.
