சென்னை: 2026 ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டத்தையொட்டி தங்கள் வாடிக்கையாளர்களுக்கு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானங்களில் பயணம் செய்வதற்கு, மிகக் குறைந்த கட்டணங்களை உள்நாடு மற்றும் சர்வதேச விமானங்களில் அறிவித்துள்ளது. நேற்று தொடங்கி வரும் 2026 ஜனவரி மாதம் 1ம்தேதி நள்ளிரவு 11.59 மணி வரையில், முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு இந்த சலுகை கட்டணங்கள் பொருந்தும். www.airindiaexpress.com இணையதளம், மொபைல் ஆப் மற்றும் அனைத்து முக்கிய முன்பதிவு மையங்களிலும் 2026 ஜனவரி 1ம் தேதி நள்ளிரவு வரையில் முன்பதிவு செய்யலாம்.
உள்நாட்டு பயணங்களுக்கு ரூ.1,850 சலுகை கட்டணத்தில், டிக்கெட் முன்பதிவு செய்து, அந்த டிக்கெட்களை 2026 ஜனவரி 12ம் தேதி முதல் 2026 அக்டோபர் மாதம் 10ம் தேதி வரை எந்த தேதியில் வேண்டுமானாலும் பயன்படுத்தி பயணம் மேற்கொள்ளலாம். அதேபோல், சர்வதேச விமான பயணத்திற்கு ரூ.5,355 சலுகை கட்டண டிக்கெட் முன்பதிவு செய்தால், ஜனவரி 12ம் தேதி முதல் 2026 அக்டோபர் 31ம் தேதி வரை எந்த தேதிகளில் வேண்டுமானாலும் பயன்படுத்தி, வெளிநாடுகளுக்கு பயணம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானத்திற்கு இந்த சலுகை கட்டணம் பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
