ஒட்டன்சத்திரம் பகுதியில் அய்யலூர் அருகே கனமழையால் குளங்கள் நிரம்பின: பொதுமக்கள் மகிழ்ச்சி

 

ஒட்டன்சத்திரம், மே 25: ஒட்டன்சத்திரம் பகுதியில் பெய்த கனமழையால் குளங்கள் நிரம்பியுள்ளன. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஒட்டன்சத்திரம் பகுதியில் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்தது. குறிப்பாக ஒட்டன்சத்திரத்திற்கு ஒன்றியத்திற்குட்பட்ட ஜோகிபட்டி ஊராட்சியில் பெய்த கனமழையால் புள்ளகவுண்டனூர் குளம், ஜோகிபட்டி குளம், மருத்துப்பட்டி குளங்கள் நிரம்பியுள்ளன. மேலும் கண்மாய்களுக்கும் நீர்வரத்து துவங்கியுள்ளது.

சோழியப்பக்கவுண்டன் கிராமத்தில் பாலம் கட்டுவதற்காக மாற்றுப்பாதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த மாற்றுப்பாதை மழைக்கு சேதமடைந்தது. கனமழையால் குளங்கள் நிரம்பியதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜோகிபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மழைநீர் நிரம்பிய குளங்களை ஊராட்சிமன்ற தலைவர் சுப்பிரமணி பார்வையிட்டார். அவருடன் துணை தலைவர் கருணாநிதி, ஊராட்சி செயலாளர் சரவணன், வார்டு உறுப்பினர்கள் உடனிருந்தனர்.

The post ஒட்டன்சத்திரம் பகுதியில் அய்யலூர் அருகே கனமழையால் குளங்கள் நிரம்பின: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Related Stories: