அரசு கலை கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் பேர் விண்ணப்பம்: கடந்த ஆண்டை விட 12,232 பேர் அதிகம்

சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவடைந்தது. 2 லட்சத்து 58 ஆயிரத்து 527 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களில் 2 லட்சத்து 11 ஆயிரத்து 10 பேர் விண்ணப்ப கட்டணம் செலுத்தியுள்ளனர். அதன்படி, கடந்த ஆண்டை விட 12 ஆயிரத்து 232 விண்ணப்பங்கள் அதிகம் பெறப்பட்டுள்ளன.  கலந்தாய்வு: மாணவர்களின் தரவரிசை பட்டியல் வருகிற 24ம் தேதி அந்தந்த கல்லூரிகளுக்கு அனுப்பி வைக்கப்படும்.

28ம் தேதி முதல் 30ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவத்தினர் என சிறப்பு ஒதுக்கீடு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். பொதுப் பிரிவு கலந்தாய்வு ஜூன் 10ல் தேதி தொடங்கி 15ம் தேதி வரை நடக்கிறது. 2ம் கட்ட பொதுப்பிரிவு கலந்தாய்வு ஜூன் 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடைபெறும். முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் வரும் ஜூலை 3ம் தேதி தொடங்கும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. கலந்தாய்வு தொடர்பான விவரங்களை, https://www.tngasa.in இணையதளத்தில் அறியலாம்.

The post அரசு கலை கல்லூரிகளில் சேர 2.58 லட்சம் பேர் விண்ணப்பம்: கடந்த ஆண்டை விட 12,232 பேர் அதிகம் appeared first on Dinakaran.

Related Stories: