புதுச்சேரி காவல்துறையில் பரபரப்பு; லீவு கேட்ட போலீஸ்காரர்…‘பொண்ணு’ கேட்ட அதிகாரி… ‘மனசு கஷ்டமா இருக்காம் ரெடி பண்ணி கொடுக்கணுமாம்’

புதுச்சேரி: புதுவையில் இந்தியன் ரிசர்வ் பட்டாலியனில் பணிபுரியும் காவலர் ஒருவர், தனது உயர் அதிகாரியான ஐஆர்பிஎன் துணை கமாண்டரிடம் மருத்துவ விடுப்பு வேண்டி அனுமதி கேட்டுள்ளார். அந்த உயர் அதிகாரி மருத்துவ விடுப்பு வேண்டுமானால் நல்ல பீஸ் (விலைமாது) இருந்தால் அனுப்புமாறு கூறும் ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த ஆடியோவில் நடந்த உரையாடல் வருமாறு:
காவலர்: குட் ஈவ்னிங் சார்..
அதிகாரி: சொல்லுப்பா…
காவலர்: உடம்பு சரியில்லை, மருத்துவ விடுப்பு வேண்டும், மிகவும் சோர்வாக உள்ளது. இன்றைக்கு ஒருநாள் கொடுத்தால்
கூட போதும். லீவு கொடுத்தால் நல்லா இருக்கும் சார்…
அதிகாரி: எம்எல் போட தேவையில்லை, எதுவும் போட தேவையில்லை. எதுவாக இருந்தாலும் நீ பாத்துக்கடா…
காவலர்: ஏதாவது வேண்டுனா சொல்லுங்க.. சார், செய்கிறேன்.
அதிகாரி: எனக்கு மனசு கஷ்டமா இருக்குது, உனக்கு ஒரு மனசு கஷ்டம் இருந்தால், எனக்கு ஒரு மனசு கஷ்டம் இருக்கும், புரியுதா.. சரி ஏதாவது பீஸ் (விலைமாது) இருந்தா, ரெடி பண்ணி கொடு..
காவலர்: பிஷ்ஷா(மீன்) சார்..
அதிகாரி: வாட்ஸ் அப் காலில் வா.. அப்ப இன்னைக்கு நைட்டு பத்து மணிக்கு டூட்டிக்கு போகலையா? வாட்ஸ் அப் காலில் வா.. என அந்த உரையாடல் முடிகிறது.
இந்த ஆடியோ சில நாட்களுக்கு முன்பே காவலர்கள் மத்தியில் பரவியுள்ளது. ஐஆர்பிஎன் அதிகாரி சம்மந்தப்பட்ட காவலரை அழைத்து, ‘டிஜிபி, ஐஜி எல்லாருமே அதிகபட்சம் மூணு வருஷம் தான் இங்கு இருப்பார்கள். அதன்பிறகு போய்விடுவார்கள். நான் தான் உங்களுக்கு சர்வீஸ் முடியும் வரை அதிகாரி’ என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆடியோ தொடர்பாக உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புதுச்சேரி காவல்துறையில் பரபரப்பு; லீவு கேட்ட போலீஸ்காரர்…‘பொண்ணு’ கேட்ட அதிகாரி… ‘மனசு கஷ்டமா இருக்காம் ரெடி பண்ணி கொடுக்கணுமாம்’ appeared first on Dinakaran.

Related Stories: