குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து 9 செம்மறி ஆடுகள் பலி

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து குதறியதில் 9 ஆடுகள் பலியானது. திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே ஆர்.வெள்ளோடு பொன்னம்பட்டி பாலகிருஷ்ணபுரத்தை சேர்ந்தவர் செல்லப்பன்(50) விவசாயி. அதே ஊரில் இவருக்கு சொந்தமான விவசாய தோட்டத்தில் செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார். மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகளை
இரவு நேரத்தில் தோட்டத்து வீட்டின் அருகே அமைக்கப்பட்ட கிடையில் அடைப்பது வழக்கம். நேற்று முன்தினம் இரவு கிடையில் 40 செம்மறி ஆடுகளை அடைத்து விட்டு, ஆர்.வெள்ளோடு முத்தாலம்மன் கோயில் திருவிழாவிற்கு சென்று விட்டனர்.

பின்னர் வீடு திரும்பிய போது, தெருநாய்கள் கடித்து 9 செம்மறி ஆடுகள் பலியானதும், 6 ஆடுகள் படுகாயத்துடன் இருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து நேற்று காலை கால்நடைத்துறையினருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு ஆர்.வெள்ளோடு கால்நடை மருத்துவர் தெய்வேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் படுகாயத்துடன் இருந்த 6 ஆடுகளுக்கு
சிகிச்சையளிக்கப்பட்டது.

The post குஜிலியம்பாறை அருகே தெருநாய்கள் கடித்து 9 செம்மறி ஆடுகள் பலி appeared first on Dinakaran.

Related Stories: