10 லட்சத்துக்கும் அதிகமான உயிரினங்கள் காலநிலை மாற்றத்தால் அழிய நேரிடலாம்: பல்லுயிர் தின விழாவில் தகவல்


ராஜபாளையம்: உலக பல்லுயிர் தினத்தை முன்னிட்டு ராஜபாளையம் வட்டாரம் கோபாலபுரம் கிராமத்தில் தோட்டக்கலைத்துறை சார்பாக 50 மாங்கன்றுகளும் இளந்திரைகொண்டான் கிராமத்தில் 50 எலுமிச்சை கன்றுகளும் நடவு செய்யப்பட்டது. இதில் தோட்டக்கலை உதவி இயக்குநர் முத்துலட்சுமி மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் ஜெய்சங்கர் மற்றும் சந்தனமாரி கலந்துகொண்டனர். இதில் பேசிய தோட்டக்கலைத்துறை அலுவலர்கள், பூமியிலுள்ள பல்வேறு உயிரினங்களும் காலநிலை மாற்றங்களை சந்திக்க வேண்டியுள்ளது. ஆனால் தற்சமயம் நாம் எதிர்கொள்ளும் அதிவிரைவான காலநிலை மாற்றங்களுக்கு ஏற்ப பெரும்பாலான உயிரினங்கள் புதிய சூழ்நிலைகேற்ப தங்களை தயார்படுத்தி கொள்ளமுடியாமலும் அல்லது வாழ்விட துண்டாக்கத்தின் காரணமாக வாழ தகுதியுடைய இடத்திற்கு செல்ல முடியாமலும் உள்ளன.

தற்போதைய கணக்கீட்டின் படி பத்து லட்சத்துக்கும் அதிகமான உயிரினங்கள் காலநிலை மாற்றத்தால் அழிய நேரிடலாம். காலநிலை மாற்றத்தால் பல்லுயிர்பரவல் அச்சுறுத்தப்பட்டாலும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கத்தை குறைக்க பல்லுயிர்ப் பெருக்க வளங்கள் உதவி செய்கிறது. காலநிலை மாற்றத்திற்கு ஏற்றவாறும், வாழ்விடங்களை பாதுகாக்கவும் பல்லுயிர்பரவலை பாதுகாத்தல் என்பது மிகவும் முக்கியமானதாகும். அதன்மூலம் பல்லுயிர் நீண்ட கால தழுவல், காலநிலை மாற்றம் மற்றும் பல்லுயிரி தொடர்பு பற்றிய நமது புரிதல், தணிப்பு மற்றும் தழுவலுக்கான முழுமையாக ஒருங்கிணைந்த பல்லுயிர் பரிசீலனைகளை மேம்படுத்தலாம். வருங்கால சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள பல்லுயிர் இழப்பு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அச்சுறுத்தல்களை இணைந்தே தடுக்க வேண்டும். இது தான் உலக பல்லுயிர் தினம் கொண்டாட்டத்திற்கான முக்கிய செய்தி ஆகும் என தெரிவித்தனர்.

The post 10 லட்சத்துக்கும் அதிகமான உயிரினங்கள் காலநிலை மாற்றத்தால் அழிய நேரிடலாம்: பல்லுயிர் தின விழாவில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: