6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது வீட்டின் அருகே விளையாடிக்ெகாண்டிருந்த

செய்யாறு, மே 22: வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வெம்பாக்கம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 13 வயது சிறுமி. அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். பெருங்கட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் ஞானபுத்தா என்ற அப்பு(26). செங்கல்பட்டில் உள்ள செல்போன் கம்பெனியில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சிறுமி தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாராம்.

அப்போது, அங்கு வந்த ஞானபுத்தா சிறுமியிடம் நைசாக பேசி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்தாராம். மேலும், இதை வெளியே சொன்னால் உனது பெற்றோரை கொன்று விடுவேன் என மிரட்டல் விடுத்தாராம். இதையடுத்து, அந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து தனது பெற்றோரிடம் கூறி அழுதுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாயார் செய்யாறு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில், இன்ஸ்பெக்டர் லதா போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து ஞானபுத்தாவை நேற்று கைது செய்தனர். பின்னர், அவரை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post 6ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது வீட்டின் அருகே விளையாடிக்ெகாண்டிருந்த appeared first on Dinakaran.

Related Stories: