அர்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் பக்தர்கள் திரண்டனர் குழந்தை வரம் வேண்டி பெண்கள் பிரார்த்தனை பெரணமல்லூர் அருகே அக்னி வசந்த விழாவில்

பெரணமல்லூர், மே 22: பெரணமல்லூர் அருகே அக்னி வசந்த விழாவில் நேற்று அர்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பெண்கள் குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த நரியம்பாடி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோயிலில் கடந்த 6ம் தேதி கொடியேற்றி அலகு நிறுத்தி அக்னி வசந்தவிழா தொடங்கியது. தொடர்ந்து, நாள்தோறும் மகாபாரத சொற்பொழிவும் நடந்து வருகிறது. கடந்த 17ம் தேதி முதல் வில்வளைப்பு, சுபத்திரை திருமணம், ராஜசூயயாகம், பகடை, துகில் உட்பட கட்டைக்கூத்து நாடகங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று அர்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. இதில், அர்ஜூனன் வேடமணிந்த நாடக கலைஞர் நாடக திடலில் நிறுத்தப்பட்டிருந்த தபசு மரத்தில் பாட்டு பாடியபடி மேலே ஏறினார். அப்போது, குழந்தை பாக்கியம், திருமண தடை நீங்க வேண்டி பிரார்த்தனை செய்து கொண்ட பெண்களுக்கு எலுமிச்சை பழம் கொடுத்து ஆசி வழங்கினார். இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

The post அர்ஜூனன் தபசு மரம் ஏறும் நிகழ்ச்சியில் பக்தர்கள் திரண்டனர் குழந்தை வரம் வேண்டி பெண்கள் பிரார்த்தனை பெரணமல்லூர் அருகே அக்னி வசந்த விழாவில் appeared first on Dinakaran.

Related Stories: