இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தொடரும்: மெகபூபா உறுதி

ரஜோரி: கருத்தியல் அடிப்படையில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஜனநாயக கட்சியின் ஆதரவு தொடரும் என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள தேசியவாத காங்கிரஸ் (சரத்சந்திரபவார்) ஸ்ரீநகர், பாராமுல்லா மற்றும் அனந்த்நாக்-ரஜோரி மக்களவை தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்தியது. இதேபோல் ஜம்மு, உதம்பூர் மற்றும் லடாக்கில் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளித்துள்ள அதே நேரத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு எதிராக வேட்பாளர்களை களமிறக்க உள்ளதாக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார். அனந்த்நாக் -ரஜோரி தொகுதியில் மெகபூபா போட்டியிடுகிறார். இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் மெகபூபா, அரசியல் சாசனத்தை பாதுகாப்பதற்காக பாடுபடும் ஒரே தலைவர் ராகுல்காந்தி என்பதால், கருத்தியல் அடிப்படையில் இந்தியா கூட்டணிக்கு மக்கள் ஜனநாயக கட்சி ஆதரவு அளிக்கிறது.

அரசியலமைப்பு நமது நாட்டின் அடித்தளம். அதை நாம் பாதுகாப்பது அவசியமாகும். இல்லையெனில் எந்த உரிமையும் நம்மிடம் இருக்காது. பாஜ அரசியலமைப்பை மாற்றுவது மட்டுமல்லாமல் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசியினரின் இட ஒதுக்கீட்டை முடிக்க விரும்புகிறார்கள்” என்றார்.

The post இந்தியா கூட்டணிக்கு ஆதரவு தொடரும்: மெகபூபா உறுதி appeared first on Dinakaran.

Related Stories: