நெட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. பீகாரில் விசாரணைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம பொதுமக்கள் தாக்குதல்: 4பேர் கைது!!

பாட்னா: யுஜிசி நெட் தேர்வு வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் விசாரணை நடத்த சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம பொதுமக்கள் சேர்ந்து தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர் பணியிடங்களை பெறுவதற்கான நெட் தகுதி தேர்வை இந்த மாதம் 18ம் தேதி தேசிய தேர்வு முகமை நடத்தியது. 9 லட்சம் பேர் எழுதிய நெட் தேர்வுக்கான வினாத்தாள்கள் டார்க் நெட் எனப்படும் ரகசிய இணையத்தள வாயிலாக கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதனால் நெட் தேர்வை ரத்து செய்யுமாறு உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் பிரிவு தகவல் அனுப்பியது. அதை தொடர்ந்து 19ம் தேதி நெட் தேர்வை தேசிய முகமை ரத்து செய்தது. இதனை தொடர்ந்து சிபிஐ விசாரணைக்கும் ஒன்றிய அரசு உத்தரவிட்டது. 20ம் தேதி முதல் வழக்கை பதிவு செய்த சிபிஐ அதிகாரிகள் அடுத்தகட்ட விசாரணைக்காக பீகார் சென்றனர்.

நவாடா மாவட்டத்தில் உள்ள ராஜவுளி என்ற இடத்தில் சில மாணவர்களிடம் விசாரிக்க சென்றபோது அந்த ஊர் பொதுமக்கள் திடீரென தாக்குதல் நடத்தினர். தாக்குதலில் சிபிஐ மற்றும் உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் காயமடைந்த நிலையில் தாக்கிய 4பேர் கைது செய்யப்பட்டனர். சிபிஐ அதிகாரிகள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

The post நெட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. பீகாரில் விசாரணைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள் மீது கிராம பொதுமக்கள் தாக்குதல்: 4பேர் கைது!! appeared first on Dinakaran.

Related Stories: