மின்மோட்டார் வைக்கும் இரும்பு ஸ்டாண்டு திருடியவர் கைது

 

பல்லடம், மே 18: பல்லடம் அருகேயுள்ள பொங்கலூர் ஒன்றியம் கண்டியங்கோவில் ஊராட்சிக்கு உட்பட்ட கருங்காளிபாளையத்தைச் சேர்ந்த மகாலிங்கம் என்பவரது மகன் மணிகண்டன் (32). விவசாயியான இவர் நேற்று தனது தோட்டத்திற்கு சென்ற போது அங்கு மர்ம நபர் ஒருவர்.இவரது மின் மோட்டார் வைக்கும் இரும்பு ஸ்டாண்டு ஒன்றை எடுத்து மொபட்டில் வைத்துக் கொண்டிருப்பதை பார்த்தார்.

உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவரை கையும் களவுமாக பிடித்து அவினாசிபாளையம் போலீசில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் கரூர் குளித்தலையை அடுத்த வலையபட்டியைச் சேர்ந்த முருகன் (52) என்பது தெரியவந்தது. அவர் தற்போது பெருந்தொழுவு பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 75 கிலோ இரும்பு ஸ்டாண்டு மற்றும் மொபட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

The post மின்மோட்டார் வைக்கும் இரும்பு ஸ்டாண்டு திருடியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: