ஆயுத உற்பத்தி தொழிற்சாலை இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை

கொழும்பு: இலங்கையின் கொழும்புவில் பாதுகாப்பு துறை அமைச்சர் பிரேமிதா பந்தாரா தென்னகோன் நேற்று அளித்த பேட்டியில், ‘‘இலங்கை-இந்தியா இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் சிறிய ஆயுத உற்பத்தியை தொடங்குவது குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். இந்திய பாதுகாப்பு துறை அமைச்சகத்துடன் தொடர்பில் இருந்து வருகிறோம். இந்தியாவிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய இருக்கின்றது. ராணுவத்துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டு முயற்சிக்கான விவாதங்கள் நடந்து வருகின்றது” என்றார்.

The post ஆயுத உற்பத்தி தொழிற்சாலை இந்தியாவுடன் இலங்கை பேச்சுவார்த்தை appeared first on Dinakaran.

Related Stories: