காங்கயம் பகுதியில் கூட்டு குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணி ஆய்வு

காங்கயம் : திருப்பூர் மாவட்டம் காங்கயம் ஊராட்சி ஒன்றியம் சென்னிலை சாலை சாமியப்பாநகர் முத்தூர்-காங்கயம் கூட்டுக்குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் ஆய்வு செய்தார்.இது குறித்து மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் கூறியதாவது: திருப்பூர் மாவட்டம், சென்னிமலை முதல் காங்கயம் செல்லும் பிரதான சாலை, சாமியப்பாநகர் பகுதியில் சாலை விரிவாக்கப்பணிகள் மேற்கொண்டபோது, முத்தூர்-காங்கயம் கூட்டு குடிநீர்த்திட்ட குடிநீர் குழாய்கள் பழுது ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, குழாய்கள் மாற்றம் செய்யும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குழாய்களை மாற்றம் செய்து சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள நெடுஞ்சாலைத்துறை மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து, முத்தூர் பேருந்து நிலையம் அருகில் மற்றும் முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் முத்தூர் துணை வேளாண் விரிவாக்க மையம் அமைப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதே போல முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வேளான் விளை பொருட்களையும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும், மூலனூர் பேரூராட்சியில் அம்ரூத் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், புதுப்பை ஊராட்சி அமராவதி ஆற்றில் நீர் உறிஞ்சுக்கிணறு மற்றும் நீருந்து நிலையம் அமைக்கும் பணிகளை ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.முன்னதாக, வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், மேட்டுப்பாளையம் ஊராட்சியில் குடிநீர் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், துணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய உதவி செயற்பொறியாளர்கள், கிருஷ்ணகுமார், சீனிவாசன், உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் தங்கவேல், உதவி பொறியாளர் முகிலா, துணை வேளாண் விரிவாக்க அலுவலர் பொன்னுச்சாமி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

The post காங்கயம் பகுதியில் கூட்டு குடிநீர் குழாய்கள் பராமரிப்பு பணி ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: