காவலர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பத்தூர் மாவட்டம், நாட்டறம்பள்ளி வட்டம், சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை, ஏலரப்பட்டி பகுதி கடந்த 9ம் தேதி வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்துவரும் காவலர் ஆறுமுகம் (46) வாணியம்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிரில் பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் காவலர் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை கேட்டு மிகுந்த வருத்தமும், வேதனையுமடைந்தேன்.

காவலர் ஆறுமுகத்தின் மறைவு தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். மேலும், வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்துவரும் காவலர் ஆறுமுகத்தினை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

The post காவலர் உயிரிழப்பு: முதல்வர் இரங்கல் appeared first on Dinakaran.

Related Stories: