சென்னையில் தெரிந்தது சர்வதேச விண்வெளி நிலையம்

சென்னை: சென்னையில் நேற்றிரவு சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. சர்வதேச விண்வெளி நிலையம், நமது கிரகத்தைச் சுற்றி வரும் பெரிய விண்கலம். விண்வெளி வீரர்கள் இதில் தங்கி ஆய்வுகள் நடத்தி வருகின்றனர். இந்த சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை சென்னையில் இருந்து வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று நாசா அறிவித்திருந்தது. நேற்றிரவு 7.09 மணி முதல் வெறும் கண்களால் 7 நிமிடங்களுக்கு வானில் தெரியும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சர்வதேச விண்வெளி மையம் மிகவும் பிரகாசமாக இருக்கும் காரணத்தால், இதை வெறும் கண்களால் பார்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் நேற்று ஆராய்ச்சியாளர்கள், அறிவியல் மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் வானத்தை ஆவலுடன் பார்த்தபடி இருந்தனர். ஏற்கனவே அறிவித்தபடி 7.09 மணிக்கு மேல் வெளிச்ச புள்ளியாகவும், சற்று நீண்ட கோடாகவும் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையத்தை பார்க்க முடிந்தது. சென்னையின் பல இடங்களில் சர்வதேச விண்வெளி ஆய்வு நிலையம் கடந்து செல்வதை மக்கள் பார்த்து ரசித்தனர்.

The post சென்னையில் தெரிந்தது சர்வதேச விண்வெளி நிலையம் appeared first on Dinakaran.

Related Stories: