திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை; சுக்காலியூர் பகுதியில் சோளப்பயிர் சாகுபடி அதிகரிப்பு

கரூர், மே 10: கருர் மாவட்டம் சுக்காலியூர் பகுதியில் அதிகளவு சோளப் பயிர் விவசாயிகளால் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டம் செட்டிப்பாளையம், சுக்காலியூர், கருப்பம்பாளையம், அப்பிபாளையம் வழியாக அமராவதி ஆறு மாநகரின் வழியாக திருமுக்கூடலு£ர் நோக்கிச் செல்கிறது. அமராவதி ஆற்றுப்பாசன பகுதியில் நெல், கரும்பு, பருத்தி, மரவள்ளிக் கிழங்கு போன்ற பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. கரூர் மாவட்டத்தில் அமராவதி, காவிரி என இரண்டு ஆறுகள் பயணித்தாலும், சுக்காலியூர் போன்ற பகுதிகளில் கிணற்றுப்பாசனம் மூலமும் விவசாயம் நடைபெற்று வருகிறது.

அந்த வகையில், சுக்காலியூர் பகுதியை சுற்றிலும் நு£ற்றுக்கணக்கான விவசாயிகள் சார்பில் சோளப் பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பிரதான சாகுபடியாக சோளப் பயிர் இந்த பகுதியில் அதிகளவு சாகுபடி செய்யப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த பகுதி விவசாயிகளும் ஆர்வத்துடன் சோளப் பயிரை சாகுபடி செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post திராவிட மாடல் ஆட்சியின் 3 ஆண்டு சாதனை; சுக்காலியூர் பகுதியில் சோளப்பயிர் சாகுபடி அதிகரிப்பு appeared first on Dinakaran.

Related Stories: