ஒடிசா மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்தால் 5 லட்சம் பேருக்கு இலவச அயோத்தி பயணம்: அசாம் முதல்வர் ஹிமந்தா வாக்குறுதி


மல்கான்கிரி: ஒடிசாவில் பாஜ ஆட்சி அமைந்தால் 5 லட்சம் பேர் இலவசமாக அயோத்தி ராமர் கோயிலுக்கு இலவசமாக புனித யாத்திரை அழைத்து செல்லப்படுவார்கள் என அசாம் முதல்வர் வாக்குறுதி அளித்துள்ளார். ஒடிசா மாநிலத்தில் மக்களவை தேர்தலுடன் சட்ட பேரவை தேர்தலும் நடக்கிறது. இந்நிலையில், மல்கான்கிரி மாவட்டம், கலிமெல்லா என்ற இடத்தில் நேற்று நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசுகையில்,‘‘ அசாமில் ஒரு லட்சம் பேர் அயோத்திக்கு அரசு சார்பில் புனித யாத்திரை அழைத்து செல்லப்படுவார்கள் என நான் உறுதி அளித்துள்ளேன்.

அசாமை விட ஒடிசா பெரிய மாநிலம். எனவே ஒடிசாவில் பாஜ வெற்றி பெற்றால் 5 லட்சம் பேர் அயோத்தி புனித யாத்திரைக்கு அழைத்து செல்லப்படுவார்கள் என உறுதி அளிக்கிறேன். ஒடிசாவில் பதவியேற்கும் பாஜவின் புதிய முதல்வர் இந்த ஏற்பாடுகளை செய்து கொடுப்பார். மல்கான்கிரியில் உள்ள கிராமங்களின் பெயர்கள் எம்.வி.82, எம்.வி.83 என எண்களின் அடிப்படையில் வைக்கப்பட்டுள்ளது. சிறை கைதிகளுக்குதான் இது போல் பெயர் வைப்பார்கள். பாஜ ஆட்சி அமைந்தால் இந்த கிராமங்களின் பெயர்கள் மாற்றப்படும்’’ என்றார்.

The post ஒடிசா மாநிலத்தில் பாஜ ஆட்சி அமைந்தால் 5 லட்சம் பேருக்கு இலவச அயோத்தி பயணம்: அசாம் முதல்வர் ஹிமந்தா வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: