தேர்தலுக்கு பிறகு ஒடிசாவில் பிஜேடியை உடைக்க பாஜ திட்டம்: வி.கே.பாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டு

புவனேஷ்வர்: ஒடிசாவில் 21 மக்களவை தொகுதிகளுக்கும், 147 பேரவை தொகுதிகளுக்கும் வரும் 13,20,25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் கஞ்சம் மாவட்டம் கோபால்பூரில் வி.கே.பாண்டியன் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது, “2014 பேரவை தேர்தலில் 120 இடங்களை வெல்வோம் என்று சொன்ன பாஜ தோல்வியடைந்தது. இப்போது 60 அல்லது 50 இடங்களை மட்டும் பெற்றால் போதும் என நினைத்து போராடுகிறார்கள். ஆளும் பிஜூ ஜனதா தளத்தை பிளவுப்படுத்தவே பாஜ திட்டமிட்டுள்ளது. ஆனால் பாஜவின் திட்டம் பலிக்காது ” என்று கூறினார்.

The post தேர்தலுக்கு பிறகு ஒடிசாவில் பிஜேடியை உடைக்க பாஜ திட்டம்: வி.கே.பாண்டியன் பகிரங்க குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: