திங்கள்சந்தையில் செயல்படாத புறக்காவல் நிலையம்; பஸ் ஸ்டாண்டில் அத்துமீறிய காதல் ஜோடி: எச்சரித்த பேரூராட்சி ஊழியர்

திங்கள்சந்தை: திங்கள்நகர் காமராஜர் பஸ் ஸ்டாண்டில் காதலர்கள் அத்துமீறும் சம்பவங்கள் பயணிகளை முகம் சுளிக்க வைப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. திங்கள்நகரில் அமைந்துள்ளது காமராஜர் பஸ் ஸ்டாண்ட். இந்த பஸ் ஸ்டாண்டில் இருந்து தினந்தோறும் சென்னை, பெங்களூர் என்று பல்வேறு பெரு நகரங்களுக்கும், நாகர்கோவில், கருங்கல், குளச்சல், குலசேகரம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் ஏராளமான அரசு பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் இரவு பகல் என்று எப்போதுமே இந்த பஸ் ஸ்டாண்ட் பரபரப்பாக இருப்பதை பார்க்க முடிகிறது.

இதற்கிடையே சமீப காலமாக பஸ் ஸ்டாண்ட்டில் காதலர்கள் அத்துமீறும் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து வருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து உள்ளது. பள்ளி செயல்படும் நாட்களில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் அத்து மீறிய நிலையில், தற்போது காதலர்கள் அத்துமீறும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. காதலர்கள் நெருக்கமாக இருந்து அத்துமீறும் சம்பவங்கள் குழந்தைகள், இளம் பெண்களை முகம் சுளிக்க வைக்கிறது.
இதேபோன்ற ஒரு சம்பவம் நேற்றும் திங்கள்நகர் பஸ் ஸ்டாண்டில் அரங்கேறி இருக்கிறது. டீன் ஏஜ் காதல் ஜோடி ஒன்று நேற்று காலை பஸ் ஸ்டாண்ட்டின் வடக்கு பகுதியில் உள்ள பயணிகள் அமரும் இடத்தில் ஓரமாக அமர்ந்து இருந்தனர்‌. சிறிது நேரம் ஜாலியாக பேசிக் கொண்டு இருந்த அந்த இளம்ஜோடி அவ்வப்போது அத்துமீறல்களிலும் ஈடுபட்டது.

இதைப் பார்த்த பயணிகள் சிலர் பஸ் வராவிட்டாலும் பரவாயில்லை என்று கருதி அந்த இடத்தை காலி செய்து விட்டனர். இருப்பினும் யாரை பற்றியும் கவலைப்படாமல் மதியம் வரை இளம்காதல் ஜோடி அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருந்தனர். இது தொடர்பாக வியாபாரிகள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு பேரூராட்சி பணியாளர் விரைந்து வந்தனர். தொடர்ந்து அத்துமீறலில் ஈடுபட்ட அந்த இளம்ஜோடியை கடுமையாக எச்சரித்தனர். தொடர்ந்து அவர்களிடம் எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டனர். ஆனால் பதில் எதையும் சொல்லாமல் மவுமான இளம்ஜோடி பிரச்னை பெரியதாகிவிடக் கூடாது என்ற பயத்தில் அங்கிருந்து நைசாக நடையை கட்டிவிட்டனர்.

இது குறித்து வியாபாரிகள், பயணிகள் கூறியதாவது; திங்கள்நகர் பஸ் ஸ்டாண்டில் புறக்காவல் நிலையம் ஒன்று அமைந்து உள்ளது. ஆனால் இந்த புறக்காவல் நிலையத்தில் போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் இருப்பது இல்லை. புறக்காவல் நிலையத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டால் இது போன்ற அத்துமீறல்கள் நடப்பதை தடுக்க முடியும். இது தவிர திருட்டு, மினி பஸ் டிரைவர் கண்டக்டர்களுக்கு இடையே ஏற்படும் மோதல்களும் நடக்காத வகையில் தடுக்க முடியும். ஆகவே இது விஷயத்தில் எஸ்பி தனி கவனம் செலுத்தி புறக்காவல் நிலையத்தில் 24 மணிநேரமும் பாதுகாப்பு பணியில் போலீசார் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

இளம்ஜோடி அவ்வப்போது அத்துமீறல்களிலும் ஈடுபட்டது. இதைப் பார்த்த பயணிகள் சிலர் பஸ் வராவிட்டாலும் பரவாயில்லை என்று கருதி அந்த இடத்தை காலி செய்து விட்டனர். இருப்பினும் யாரை பற்றியும் கவலைப்படாமல் மதியம் வரை இளம்காதல் ஜோடி அத்துமீறல்களில் தொடர்ந்து ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

The post திங்கள்சந்தையில் செயல்படாத புறக்காவல் நிலையம்; பஸ் ஸ்டாண்டில் அத்துமீறிய காதல் ஜோடி: எச்சரித்த பேரூராட்சி ஊழியர் appeared first on Dinakaran.

Related Stories: