இன்று மின்சாரம் நிறுத்தம்

 

மண்டபம், மே 8: ராமேஸ்வரம் நகராட்சி, தங்கச்சிமடம் ஊராட்சி பகுதிகளில் ஒரு சில இடங்களில் பராமரிப்பு காரணமாக இன்று மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது.ராமேஸ்வரம் துணை மின் நிலையத்தில் சிறப்பு பராமரிப்பு பணி இன்று மின்சாரவாரிய பணியாளர்கள் மேற்கொள்ள உள்ளனர். இதனால் இன்று காலை 9 மணி முதல் காலை 11.30 மணி வரை மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

இதனால் ராமேஸ்வரம் நகர்புறம், தங்கச்சிமடம், அரியாங்குண்டு,பேக்கரும்பு, மெய்யம்புளி, செம்மமடம், மாங்காடு, பர்வதம், ஓலைக்குடா, ஏரகாடு, வடகாடு, சம்பை, வேர்கோடு, புதுரோடு, கரையூர், மாந்தோப்பு ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் செந்தில்குமார் தெரிவித்தார்.

The post இன்று மின்சாரம் நிறுத்தம் appeared first on Dinakaran.

Related Stories: