காரமடையில் ஓடும் காரில் திடீர் தீப்பிடித்ததால் பரபரப்பு

 

மேட்டுப்பாளையம், டிச.28: நீலகிரி மாவட்டம் ஊட்டியை சேர்ந்தவர் ஷ்யாம் (42). இவர் நேற்று காலை காரில் ஊட்டியில் இருந்து கோவை நோக்கி சென்றார். கார் காரமடை பஸ் ஸ்டாண்ட் அருகே சென்ற போது காரின் முன் பகுதியில் இருந்து புகை வந்துள்ளது. சுதாகரித்து கொண்ட ஷ்யாம் உடனே காரை வீட்டு கீழே இறங்கியுள்ளார். பின்னர், காரின் முன்பகுதியில் திடீரென தீப்பற்றியுள்ளது.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் உடனடியாக குடம், தண்ணீர் கேன் போன்றவற்றில் தண்ணீர் நிரப்பி தீ பரவாமல் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் காரின் முன் பகுதி லேசாக சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக இவ்விபத்தில் யாருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. இதுகுறித்து காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

The post காரமடையில் ஓடும் காரில் திடீர் தீப்பிடித்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.

Related Stories: