மேட்டுப்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ற முதியவர் கைது

 

மேட்டுப்பாளையம், டிச.27: மேட்டுப்பாளையம் சாந்தி நகர் பகுதியில் சட்டவிரோதமாக அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி விற்பனை நடைபெறுவதாக நேற்று போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்ன காமனனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.அதன்பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற எஸ்ஐ ஆனந்தகுமார் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த முதியவரை பிடித்து விசாரித்ததில் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து அவரை போலீஸ் ஸ்டேஷன் அழைத்துச்சென்று போலீசார் மேற்கொண்டனர். இதில் அவர், மேட்டுப்பாளையம் – காரமடை சாலையில் உள்ள சாந்தி நகரை சேர்ந்த சேகர் (67) என்பதும், அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் 3 நம்பர் லாட்டரி சீட்டுகளை நோட்டில் எழுதி வைத்து விற்பனை செய்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து ஆன்லைன் லாட்டரி எழுதும் நோட்டு மற்றும் ரொக்கப்பணம் ரூ.450ஐ பறிமுதல் செய்தனர். பின்னர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை சிறையில் அடைத்தனர்.

The post மேட்டுப்பாளையத்தில் ஆன்லைன் லாட்டரி விற்ற முதியவர் கைது appeared first on Dinakaran.

Related Stories: