சி ல் லி பா யி ன் ட்…

* ஐசிசி உலக கோப்பை டி20 தொடருக்கான ஸ்காட்லாந்து அணி: ரிச்சி பெர்ரிங்டன் (கேப்டன்), ஜார்ஜ் முன்சி, ஓல்லி ஹேர்ஸ், பிராண்டன் மெக்முல்லன், மேத்யூ கிராஸ், சார்லி டியர், மைகேல் ஜோன்ஸ், கிறிஸ் கிரீவ்ஸ், மைகேல் லீஸ்க், மார்க் வாட், சபியான் ஷரிப், கிறிஸ் சோல், பிராட் வீல், பிராட் கர்ரி, ஜாக் ஜார்விஸ்.

* உலக கோப்பைக்கான உகாண்டா அணியில் 43 வயது சுழற்பந்துவீச்சாளர் பிராங்க் என்சுபுகா தேர்வு செய்யப்பட்டுள்ளார். உகாண்டா: பிரையன் மசாபா (கேப்டன்), ரியாஸத் அலி ஷா (துணை கேப்டன்), ரோஜர் முகாசா, சைமன் செசாஸி, ரோனக் படேல், ராபின்சன் ஒபுயா, ஃபிரெட் அகெலம், கென்னத் வைஸ்வா, தினேஷ் நக்ரானி, அல்பெஷ் ராம்ஜனி, காஸ்மஸ் கியெவுடா, பிலால் ஹசன், ஜுமா மியாகி, ஹென்றி சென்யாண்டோ, பிராங்க் என்சுபுகா.

* தரம்சாலா, இமாச்சல் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில், இயற்கை மற்றும் செயற்கை புல் கலந்த ‘ஹைப்ரிட் ஆடுகளம்’ தொடக்க விழா நேற்று நடந்தது. இது போன்ற ‘ஹைப்ரிட் ஆடுகளம்’ ஏற்கனவே இங்கிலாந்தின் லார்ட்ஸ், ஓவல் மைதானங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.

* ரோம் நகரில் நடைபெற உள்ள இத்தாலியன் ஓபன் டென்னிஸ் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில், ஸ்பெயின் நட்சத்திரம் ரபேல் நடால் தனது முதல் சுற்றில், தகுதிச்சுற்றில் இருந்து பிரதான சுற்றுக்கு முன்னேறும் வீரரை எதிர்கொள்கிறார்.

The post சி ல் லி பா யி ன் ட்… appeared first on Dinakaran.

Related Stories: