பொய்யை ஆயிரம் முறை கூறினாலும் உண்மையாகாது: மோடி குறித்து கார்கே விமர்சனம்

புதுடெல்லி: பொய்யை ஆயிரம் முறை கூறினாலும் அது உண்மையாகிவிடாது என்று பிரதமர் மோடியின் பேச்சு குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி சமூகத்தினரின் இட ஒதுக்கீட்டை பறித்து , கட்சியின் வாக்குவங்கிக்கு கொடுக்கும் காங்கிரசின் நோக்கம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் என்று பாஜ வேட்பாளர்களுக்கு கடிதம் எழுதி இருந்தார். இந்நிலையில் இதற்கு பதிலளித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த கடிதத்தில் வாக்காளர்களுக்கு என்ன தெரிவிக்க வேண்டும் என்பது குறித்து நீங்கள் எழுதிய கடிதத்தை பார்தேன். அந்த கடிதத்தின் தொனி மற்றும் அதில் இருக்கும் உள்ளடக்கத்தை பார்க்கும்போது அதில் மிகுந்த கவலை மற்றும் விரக்தி உங்களை பிரதமரின் பதவிக்கு பொருந்தாத மொழியை பயன்படுத்துவதற்கு உங்களை தூண்டுகிறது என்பது தெரிகிறது. உங்களது பேச்சுக்களில் உள்ள பொய்கள் நீங்கள் விரும்பிய விளைவை ஏற்படுத்தவில்லை என்பது போல் கடிதம் உள்ளது. உங்களது வேட்பாளர்கள் உங்களது பொய்யை பெரிதாக்க வேண்டும் என விரும்புகிறீர்கள். பொய்யை ஆயிரம் முறை கூறினாலும் அது உண்மையாகிவிடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பொய்யை ஆயிரம் முறை கூறினாலும் உண்மையாகாது: மோடி குறித்து கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: