அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் யார்?.. அடுத்த 24 மணி நேரத்தில் அறிவிப்பு வெளியாகும்


புதுடெல்லி: அடுத்த 24-30 மணி நேரத்தில் அமேதி , ரேபரேலி வேட்பாளர் யார் என்பது குறித்து முடிவு செய்யப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், அமேதி மற்றும் ரேபரேலி மக்களவை தொகுதிகளில் வருகிற 20ம் தேதி ஐந்தாவது கட்டமாக தேர்தல் நடைபெறுகின்றது. இந்த தொகுதியில் போட்டியிடுவதற்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு நாளை கடைசி நாளாகும். வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இரண்டு நாட்களே இருந்த நிலையிலும் அமேதி மற்றும் ரேபரேலி தொகுதி வேட்பாளர்கள் யார் என்பது அறிவிக்கப்படாமல் சஸ்பென்ஸ் நீடித்து வருகின்றது.

இதனால் காங்கிரஸ் ஆதரவாளர்கள் மிகுந்த குழப்பத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லியில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொது செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், ‘‘அமேதி, ரேபரேலியில் போட்டியிடும் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான அதிகாரத்தை கட்சியின் தேர்தல் குழுவானது தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் வழங்கியுள்ளது. எனவே யாரும் அச்சமடைய தேவையில்லை. அடுத்த 24-30 மணி நேரத்துக்குள் இரண்டு தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களை கட்சியின் தலைவர் முடிவு செய்து அறிவிப்பார் என்று எதிர்பார்க்கிறேன்” என்றார்.

The post அமேதி, ரேபரேலி தொகுதி காங். வேட்பாளர்கள் யார்?.. அடுத்த 24 மணி நேரத்தில் அறிவிப்பு வெளியாகும் appeared first on Dinakaran.

Related Stories: