மோடியின் கையை விட்டு தேர்தல் நழுவிவிட்டது: ராகுல் விமர்சனம்

புதுடெல்லி: பிரதமர் மோடியின் கையை விட்டு தேர்தல் நழுவிவிட்டதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பதிவில், ‘‘இந்தியர்களின் அரசாங்கம் என்பதில் காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது. பெண்களுக்கு மாதம் ரூ.8500, இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சத்தில் வேலை, 30 லட்சம் பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு மற்றும் விவசாயிகளுக்கு சட்டரீதியான குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கப்படும் என்று காங்கிரஸ் உத்தரவாதம் அளிக்கிறது. மோடியின் உத்தரவாதம்: அதானிகளின் அரசு, கோடீஸ்வரர்களின் பாக்கெட்டில் நாட்டின் செல்வம், நன்கொடை வியாபாரம் பறிக்கும் கும்பல், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகம் முடிந்துவிட்டது, நிதி பற்றாக்குறையை எதிர்நோக்கும் விவசாயிகளாகும். காங்கிரஸ் மற்றும் பிரதமர் மோடியின் உத்தரவாதத்துக்கான வித்தியாசம் தெளிவாக உள்ளது. நாட்டில் காங்கிரஸ் கோடிக்கணக்கான கோடீஸ்வரர்களை உருவாக்கும் என்பதும் தேர்தல் தனது கையைவிட்டு நழுவி சென்றுவிட்டது என்று மோடிக்கு தெரியும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மோடியின் கையை விட்டு தேர்தல் நழுவிவிட்டது: ராகுல் விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: