கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 4 பேர் கைது

கடலூர்: கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை உள்ளது. நேற்று நள்ளிரவு 12.30 மணி அளவில் அம்பத்கேர் சிலை மீது மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டுகளை வீசி உள்ளனர். மர்ம நபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலைக்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. சத்தம் கேட்டு அம்பலவாணன் பேட்டை கிராம பொது மக்கள் பதறி அடித்து ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது இளைஞர்கள் சிலர் டூ வீலரில் கத்திக்கொண்டு போயுள்ளனர்.

இதையடுத்து, அம்பலவாணன் பேட்டை பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வந்துள்னனர். அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயன்ற சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீச முயன்ற சமூக விரோதிகளை உடனடியாக கைது செய்யவேண்டும் எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த வெற்றி (21), கிருஷ்ணகுமார் (21), சதீஷ் (29), விஜயராஜ் (22) ஆகிய 4 பேரை கைது செய்துள்ளனர்.

The post கடலூர் அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச முயற்சி: 4 பேர் கைது appeared first on Dinakaran.

Related Stories: