மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் அமெரிக்க பயணி கைது

மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்றிரவு குஜராத் மாநில தலைநகர் அகமதாபாத் செல்லும் இன்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் செல்வதற்காக வந்திருந்த அமெரிக்க நாட்டு பயணி ஆன்ட்ரூ யர்ஷன் (40) என்பவரின் கைப்பையை ஸ்கேனிங் செய்தனர். அப்போது அந்த கைப்பைக்குள் அபாயகரமான பொருள் இருப்பதற்கான எச்சரிக்கை மணி ஒலித்ததையடுத்து கைப்பையை தனியாக வைத்து விசாரித்தனர். பின்னர் அந்த கைப்பைக்குள் சோதனை செய்தபோது லைவ்வாக வெடிக்கும் நிலையில் பாயின்ட் 223 ரக துப்பாக்கி குண்டு இருந்தது. அந்த துப்பாக்கி குண்டை பாதுகாப்பு அதிகாரிகள் பறிமுதல் செய்து அவரது பயணத்தையும் ரத்து செய்தனர்.

இதுபற்றி நடத்தப்பட்ட விசாரணையில், ஆன்ட்ரூ யர்ஷன் தொழிலதிபர் என்பதும் தொழில் விஷயமாக இந்தியாவுக்கு வந்துள்ளார். சென்னையில் இருந்து அகமதாபாத் சென்றபோது சொந்த உபயோகத்துக்காக, தங்கள் நாட்டின் லைசென்சுடன் கூடிய துப்பாக்கி வைத்திருப்பதாகவும் துப்பாக்கியில் பயன்படுத்தப்படும் குண்டு தவறுதலாக கைப்பையில் இருந்துள்ளது. சென்னை கொண்டு வந்தபோது யாரும் பார்க்கவில்லை என்றும் ஆன்ட்ரூ யர்ஷன் கூறினார். துப்பாக்கி குண்டுடன் சென்னை விமானநிலைய போலீசில் ஒப்படைத்தனர்.

‘தன்னிடம் உள்ள துப்பாக்கி லைசென்ஸ் மற்றும் தொழில் விஷயமாக இந்தியா வந்ததற்கான ஆவணங்களை காட்டியுள்ளார். தனது கைப்பையில் தவறுதலாக துப்பாக்கி குண்டு இருந்துவிட்டது’ என்று தெரிவித்து உள்ளார். இதையடுத்து விசாரணைக்கு தேவைப்பட்டால் ஆஜராக வேண்டும் என்று எழுதி வாங்கிக்கொண்டு, நள்ளிரவில் அனுப்பி வைத்தனர்.

The post மீனம்பாக்கம் விமான நிலையத்தில் துப்பாக்கி குண்டுகளுடன் அமெரிக்க பயணி கைது appeared first on Dinakaran.

Related Stories: