மேலும் இந்தத் தொடரை வென்று இளம் வயதில் கேண்டிடேட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் தொடரை வெல்லும் நபர் என்ற சாதனையைப் படைத்துள்ளார். மூத்த செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்திற்குப் பின் செஸ் கேண்டிடேட்ஸ் தொடரை வெல்லும் இந்திய வீரர் குகேஷ் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் என்ற சாதனை படைத்த குகேஷ்-க்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “17 வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாறு படைத்த குகேஷ்-க்கு வாழ்த்துக்கள். உலக செஸ் சாம்பியன் தொடரில் டிங் லிரனுக்கு எதிரான போட்டியில் குகேஷ் வெல்ல வாழ்த்துக்கள்,”இவ்வாறு தெரிவித்தார்.
The post 17 வயதில் கேண்டிடேட்ஸ் தொடரை வென்று வரலாறு படைத்த தமிழக வீரர் குகேஷ்-க்கு வாழ்த்துக்கள் :முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.