ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு ரூ.15 கோடி அபராதம்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் ரூ.2.14 கோடி மோசடி தொடர்பான வழக்கில் வங்கியின் முன்னாள் மேலாளருக்கு ரூ.15 கோடி அபராதம் விதித்து சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் வஸ்த்ராபூரில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளை செயல்பட்டு வருகிறது. இதன் மேலாளர் ப்ரீத்தி விஜய் சாஹிஜ்வானி. இவர் இரண்டு நபர்களின் வங்கி கணக்குகளின் வௌிநாட்டு டெபாசிட் பணத்தின் முதிர்வு தொகையை இரண்டு போலி கணக்குகளில் வரவு வைத்துள்ளார்.

இந்த மோசடி தொடர்பாக வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ப்ரீத்தி விஜய் நாட்டை விட்டு வௌியேறி கனடாவில் தலைமறைவாக இருந்தார். இதுதொடர்பாக கனடாவுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் கடந்த 2012ம் ஆண்டு ப்ரீத்தி விஜய் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். இதுதொடர்பான வழக்கில் ப்ரீத்தி விஜய் சாஹிஜ்வானிக்கு ரூ.15 கோடி அபராதமும், 7ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

The post ரூ.2.14 கோடி மோசடி ஐஓபி வங்கி மேலாளருக்கு ரூ.15 கோடி அபராதம்: சிபிஐ நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: