சில்லிபாயின்ட்..

* ஐரோப்பிய கால்பந்து கிளப்களுக்கு இடையிலான யுஇஎப்ஏ சாம்பின்ஸ் லீக் கால்பந்து போட்டியின் காலிறுதி சுற்று ஆட்டங்கள் நேற்றுடன் முடிந்தன. ஏற்கனவே டார்ட்மண்ட், பிஎஸ்ஜி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி இருந்தன. நேற்று நடந்த காலிறுதி ஆட்டங்களில் பேயர்ன் மியூனிக் அணி, ஆர்சனல் அணியையும், ரியல் மாட்ரிட் அணி, மான்செஸ்டர் சிட்டி அணியையும் வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தன.

* பேயர்ன் மியூனிக்(ஜெர்மனி)-ரியல் மாட்ரிட்(ஸ்பெயின்)-மான்செஸ்டர் சிட்டி(இங்கிலாந்து), பிஎஸ்ஜி(பிரான்ஸ்)-டார்ட்மண்ட்(ஜெர்மனி) அணிகள் மோதும் 2 சுற்று அரையிறுதி ஆட்டங்கள் ஏப்.30, மே 7ம் தேதிகளில் நடக்கும்.

* ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டி கனடாவில் நடக்கிறது. இந்திய வீரர்கள் உட்பட 8 கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்றுள்ள போட்டியில் நேற்று 11வது சுற்று ஆ ட்டங்கள் முடிந்தன. அதில் ரஷ்ய வீரர் இயான் நிம்போம்னிசி 7 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறார். இந்தியாவின் குகேஷ் 6.5 புள்ளிகளுடன் 2வது இடத்திலும், பிரக்ஞானந்தா 5.5 புள்ளிகளுடனும், குஜராத்தி 5புள்ளிகளுடனும் முறையே 5, 6வது இடங்களில் உள்ளனர். இன்னும் 3 சுற்று ஆட்டங்கள் நடைபெற உள்ளன.

* ஃபிடே கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியின் பெண்கள் பிரிவில் இந்தியாவின் கோனேரு ஹம்பி 5.5புள்ளிகளுடன் 4வது இடத்திலும், வைஷாலி 4.5புள்ளிகளுடன் 7வது இடத்திலும் உள்ளனர். இதுவரை 11 சுற்றுகள் முடிந்துள்ளன.

* கிர்கிஸ்தானில் ஒலிம்பிக் தகுதிச் சுற்று மல்யுத்தப் போட்டி இன்று தொடங்குகிறது. அதில் பங்கேற்க இந்தியாவின் தீபக் புனியா, சஜித் கல்கா மற்றும் பயிற்சியாளர்கள் சென்ற விமானம் துபாயில் தரை இறக்கப்பட்டது. கடும் மழை காரணமாக அங்கு விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக வீரர்கள் உணவு, தங்கும் வசதி இல்லாமல் துபாய் விமான நிலையத்தில் சிக்கினர். அதனால் போட்டி தொடங்க உள்ள இன்று காலை 8 மணிக்குள் அவர்கள் கிர்கிஸ்தான் போய் சேர முடியுமா என்ற கடினமான சூழல் ஏற்பட்டுள்ளது.

The post சில்லிபாயின்ட்.. appeared first on Dinakaran.

Related Stories: