லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி

லக்னோ: ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் இன்று லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் இதுவரை தலா 6லீக் ஆட்டங்களில் விளையாடி உள்ளன. அதில் லக்னோ தலா 3 ஆட்டங்களில் வெற்றி, தோல்வியை பார்த்துள்ளது. முதல் ஆட்டத்தில் ராஜஸ்தானிடம் தோற்றலும், அடுத்த 3 ஆட்டங்களில் பஞ்சாப், பெங்களூர், குஜராத் அணிகளை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றது.

ஆனால் எஞ்சிய 2 ஆட்டங்களிலும் டெல்லி, கொல்கத்தாவிடம் தோல்விதான் கிடைத்தது. எனவே ஹாட்ரிக் தோல்வியை தடுக்க கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ இன்று முனைப்புக் காட்டும். அதற்கு டி காக், ராகுல், படிக்கல் போன்றவர்கள் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். லக்னோ அணியில் நடுவரிசையில் ஸ்டோய்னிஸ், பூரன் பதோனி, க்ருணால் ஆகியோரும், பந்து வீச்சில் நவீன் உல் ஹக், சிறப்பாக விளையாடுவது அணிக்கு பலம்.

அதே நேரத்தில் ருதுராஜ், டோனி ஆகியோர் இரட்டை குதிரை சக்தியாக அணியை வழி நடத்துவது சென்னைக்கு கூடுதல் பலம்.  நடப்பு சாம்பியன் சென்னை 6 ஆட்டங்களில் 4ல் வெற்றி, 2ல் தோல்வியை தழுவியுள்ளது. முதல் 2 ஆட்டங்களில் பெங்களூர், குஜராத் அணிகளிடம் வெற்றியும், இடையில் டெல்லி, ஐதராபாத் அணிகளிடம் தோல்வியையும், கொல்கத்தா, மும்பை அணிகளிடம் மீண்டும் வெற்றியையும் பெற்றுள்ளது. ரச்சின், ருதுராஜ், துபே, நாட் அவுட் டோனி, இலங்கை வீரர்கள் தீக்‌ஷனா, பதிரானா, முஸ்டாபிசூர் என பலரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் வெற்றி, தோல்வி மாறி, மாறிதான் கிடைக்கிறது.

சொந்த களத்தில் களம் காணுவது லக்னோவுக்கு சாதகமான அம்சம். அது சென்னைக்கு பாதகமாக இருக்குமா என்பது இன்று தெரியும். அதனால் ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்க லக்னோவும், ஹாட்ரிக் வெற்றியை வசப்படுத்த சென்னையும் இன்று மல்லுக் கட்டும். அதுமட்டுமல்ல இந்த 2 அணிகளும் இதுவரை மோதிய, எல்லா ஆட்டங்களில் ஒவ்வொரு முறையும் 2 அணிகளும் தலா 200 ரன்னுக்கு மேல் குவித்துள்ளன.

The post லக்னோ-சென்னை மோதலில் யாருக்கு ஹாட்ரிக் வெற்றி, தோல்வி appeared first on Dinakaran.

Related Stories: