திருவள்ளூர்  வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை

திருவள்ளூர், ஏப். 18: திருவள்ளூரில் உள்ள 108 திவ்ய தேசங்களில் ஒன்றான  வைத்திய வீரராகவ பெருமாள் கோயிலில் சித்திரை பிரம்மோற்சவ விழா 24ம் தேதி வரை நாட்கள் நடைபெறுகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான சித்திரை மாத பிரம்மோற்சவ விழா 15ம் தேதி காலை 4.45 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகியது. இதனைத் தொடர்ந்து காலை தங்க சப்பரத்திலும், இரவு சிம்ம வாகனத்திலும், உற்சவர்  வைத்திய வீரராகவ பெருமாள்  தேவி, பூதேவி சமேதராக திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழாவில் 2ம் நாள் காலை ஹம்ஸ வாகனத்தில் வீதி உலாவும், திருமஞ்சனம் நிகழ்ச்சியும், இரவு சூர்ய பிரபை பக்தி உலாவும் நடைபெற்றது. பிரம்மோற்சவ விழாவின் 3ம் நாளான நேற்று காலை கருட சேவை வெகு விமரிசையாக நடைபெற்றது. இரவு ஹனுமந்த வாகனத்தில் வீதி உலாவும், இன்று 4ம் நாளான 18ம் தேதி காலை சேஷ வாகனத்திலும், இரவு சந்திர ப்ரபை வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

5ம் நாளான நாளை 19ம் தேதி காலை நாச்சியார் திருக்கோலத்திலும், இரவு யாளி வாகனத்தில் வீதி உலாவும் நடைபெற உள்ளது. 6ம் நாளான 20ம் தேதி காலை வேணுகோபாலன் திருக்கோலமும் சூர்ணாபிஷேகமும், வெள்ளி சப்பரத்தில் வீதி உலாவும், இரவு யானை வாகனத்தில் வீதி உலாவும், 7ம் நாளான 21ம் தேதி காலை 7.30 மணிக்கு தேர் திருவிழாவும், இரவு திருத்தேரிலிருந்து பெருமாள் எழுந்தருளுதல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. 8ம் நாளான 22ம் தேதி காலை திருமஞ்ஜனமும், இரவு குதிரை வாகனத்தில் வீதி உலா வந்து அருள்பாலிப்பார். 9ம் நாளான 23ம் தேதி காலை ஆள்மேல் பல்லக்கு நிகழ்ச்சியும், திருக்குளத்தில் தீர்த்தவாரியும் நடைபெற உள்ளது. இரவு விஜயகோடி விமானத்திலும், 10ம் நாளான 24ம் தேதி காலை திருமஞ்ஜனமும், இரவு கண்ணாடி பல்லக்கும் என உற்சவர்  வைத்திய வீரராகவ பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் கௌரவ ஏஜென்ட் சி.சி.சம்பத், மக்கள் தொடர்ப அலுவலர் எஸ்.சம்பத் மற்றும் கோயில் அலுவலர்கள், பணியாளர்கள் செய்துவருகின்றனர்.

The post திருவள்ளூர்  வைத்திய வீரராகவர் கோயிலில் சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு கருட சேவை appeared first on Dinakaran.

Related Stories: