புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம்

சென்னை: வேல் எப்சி என்ற புதிய ஐ-லீக் கால்பந்து அணியை வேல்ஸ் நிகர்நிலை பல்கலை. துணை வேந்தர் ஐசரி கணேஷ் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் ‘தமிழகத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் கால்பந்து வீரர்களை உருவாக்க வேல் எப்சி அணியை உருவாக்கி உள்ளோம்.

இந்த அணி ஐ-லீக் தொடரிலும் விளையாடும். கால்பந்து விளையாட்டுக்கென சர்வதேச அளவில் உண்டு உறைவிட அகடமியை உருவாக்கி உள்ளோம். ஜூன் முதல் கல்வியுடன் கூடிய பயிற்சி வகுப்புகள் தொடங்கும். சென்னை தாழம்பூரில் உருவாகும் இந்த அகடமியில் எளிய பின்னணியில் இருந்து வரும் திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கப்படும். அகடமி மூலமாக கிராம அளவில் இளம் வீரர்களை தேர்வு செய்ய முகாம்கள் நடத்தப்படும்.

விளம்பரத் தூதராக ஸ்பெயின் தேசிய கால்பந்து அணியின் முன்னாள் வீரர் கெய்ஸ்கா டொகுரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய பயிற்சியாளராக நல்லப்பன் மோகன்ராஜ் செயல்படுவார். சர்வதேச தரத்திலான பயிற்சிகள் அளிக்கப்படும்’ என்றார். நிகழ்ச்சியில் வேல் எப்சி அணியின் சீருடை அறிமுகம் செய்யப்பட்டது. தமிழ்நாடு கால்பந்து சங்க முன்னாள் நிர்வாகிகள், அகடமி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

The post புதிய கால்பந்து அணி வேல் எப்சி அறிமுகம் appeared first on Dinakaran.

Related Stories: