ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி: மின்னல் வேகத்தில் காப்பாற்றிய காவலரின் சிசிடிவி காட்சி வெளியீடு..!!

மயிலாடுதுறை: மயிலாடுதுறையில் ஓடும் ரயிலிலிருந்து தவறி விழுந்த பயணியை ரயில்வே காவலர் ஒருவர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றிய சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து மன்னார்குடி செல்லக்கூடிய மண்ணை எக்ஸ்பிரஸ் ரயில் மயிலாடுதுறைக்கு வந்தது. அங்கிருந்து ரயில் புறப்பட்டபின்னர் ரயிலிலிருந்து ஒருவர் இறங்க முற்பட்டுள்ளார்.

அப்போது எதிர்பாராத விதமாக கால் இடறி தவறி விழுந்தார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படையின் முதல் நிலை காவலர் புருஷோத்தமன் மற்றும் பொதுமக்கள் துரிதமாக செயல்பட்டு அவரை காப்பாற்றியுள்ளனர். பயணியை காப்பாற்றுவது தொடர்பான சிசிடிவி காட்சி தற்போது வெளியாகியுள்ளது. பயணியை காப்பாற்றிய காவலருக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

 

The post ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி: மின்னல் வேகத்தில் காப்பாற்றிய காவலரின் சிசிடிவி காட்சி வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: