19ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தல்

நாமக்கல், ஏப்.17: நாடாளுமன்ற பொதுத்தேர்தல் நடைபெறும் தினமான 19ம் தேதி தனியார் நிறுவனங்கள், தங்களது தொழிலாளர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல்லில் தொழிலாளர் உதவி ஆணையர்(அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் வணிகர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், வரும் ஏப்ரல் 19ம் தேதி தேர்தல் நடைபெறுகிற நாளில் வணிகர்கள் கடைபிடிக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. தேர்தல் நாளான 19ம் தேதி அன்று தொழிலாளர்கள் வாக்களிக்க ஏதுவாக, அனைத்து வணிக நிறுவனங்களுக்கும் பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளதை வணிக நிறுவனங்கள் செயல்படுத்த வேண்டும்.

நிறுவனங்களில் வேலை பார்க்கும் அனைவருக்கும், சம்பளத்துடன் கூடிய ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும். அவ்வாறு சம்பளத்துடன் கூடிய விடுமுறை வழங்காத தனியார் நிறுவனங்கள் மீது, சட்ட ரீதியான நடவடிக்கை தொடரப்படும் என கூட்டத்தில் உதவி ஆணையர் தெரித்தார். இந்த கூட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், மொபைல் அசோசியேசன் மாவட்ட தலைவர் ராயல் பத்மநாபன், நகர தலைவர் ரிஸ்வான், செயலாளர் எவரெஸ்ட் ராஜா மற்றும் பல்வேறு வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

The post 19ம் தேதி விடுமுறை அளிக்க அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Related Stories: