அதானிக்கு பினாமி மோடி, மோடிக்கு பினாமி அதானி, அம்பானி கருவாட்டை சுற்றும் பூனைபோல் மோடி தமிழகத்தை சுற்றி வருகிறார்: சவுந்தரராஜன் டார்…டார்…

மயிலாடுதுறை நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சுதாவை ஆதரித்து, கும்பகோணம் காந்தி பூங்கா அருகே சிஐடியு தொழிற்சங்க மாநில தலைவர் சவுந்தரராஜன் நேற்று முன்தினம் இரவு பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது:
சுதந்திர இந்தியா வரலாற்றில் இருண்ட காலம் என்று வரலாறு பதிவு செய்யப்போவது மோடியின் பத்தாண்டு காலம். ஜனநாயகத்திற்கு பிடித்த கிரகணம் அந்த கிரகணம். இந்த தேர்தலோடு வெளிச்சம் பிறக்கும். 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று சொன்னவர்கள் இப்போது நிறுத்திக்கொண்டனர். காரணம் 200 தொகுதியே தேறாது என்ற புள்ளி விவரங்களுடன் வெளியான செய்தி. அது உண்மை என்பது வெளிச்சத்திற்கு வந்தது. ஆனால் மோடியோ கருவாட்டை சுற்றி பூனை வருவது போல தமிழகத்தை சுற்றி வருகிறார்.

தமிழகத்தில் மோடிக்கு கருவாடும் கிடைக்காது, ஒன்றும் கிடைக்காது. தமிழ்நாட்டு மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். கடைசியாக கச்சத்தீவை கையில் எடுத்துள்ளார்கள். இது மாநில அரசுகள் கடிதம் எழுதினாலும் ஒன்றிய அரசு செய்ய வேண்டிய வேலையை திசை திருப்புகிறார்கள். முடிந்தால் அண்ணாமலை தலைமையில் கச்சத்தீவிற்கு அனுப்ப முடியுமா. அதானிக்கு பினாமி மோடி. மோடிக்கு பினாமி அதானி, அம்பானி. சர்வாதிகார ஆட்சியில் ஒரே நாடு ஒரே மொழி என்று ஒவ்வொன்றாக கொண்டு வருவதற்கு முயற்சித்து வருகிறார்கள். மதவெறியை தூண்டி, அமைதியான இடத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி, நாடு மீண்டும் உள்நாட்டு போர் நடக்கும் சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். பாஜ, ஆர்எஸ்எஸ் மதவெறி சித்தாந்தத்தை அழித்து, சவப்பெட்டியில் அடைத்து குறைந்தது 300 ஆணிகள் அடிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

எடப்பாடியின் புனிதர் வேடம் எடுபடாது
சவுந்தரராஜன் கூறுகையில், ‘அதிமுக, பாஜவோடு கூட்டணி வைத்தால் மோடியின் சுமையையும், எதிர்ப்பையும் நாம் சுமக்க வேண்டும் என்பதால் தனியாக இருப்பதாக நாடகமாடுகிறார். அவர்கள் ஆட்சியில் உள்ள போது தான் மக்கள் விரோத சட்டமான சிஏஏ, மிக மோசமான விவசாய சட்டம், தொழிலாளர்கள் சட்டம் என கருப்பு சட்டங்களை நிறைவேற்ற கை தூக்கியவர்கள். இப்போது புனிதர் வேடம் போடுகிறார்கள். எந்த வேடமும் எடுபடாது’ என்றார்.

The post அதானிக்கு பினாமி மோடி, மோடிக்கு பினாமி அதானி, அம்பானி கருவாட்டை சுற்றும் பூனைபோல் மோடி தமிழகத்தை சுற்றி வருகிறார்: சவுந்தரராஜன் டார்…டார்… appeared first on Dinakaran.

Related Stories: