பாஜ 400க்கு மேல் வென்றால் ஞானவாபி மசூதி இடத்தில் கோயில் கட்டப்படும்: அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு

ராம்கர்: ஜார்க்கண்டின் ராம்கரில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா கலந்து கொண்டு வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ஹிமந்த பிஸ்வ சர்மா, “2019 தேர்தலில் 300 இடங்களை வென்ற பாஜ அயோத்தியில் ராமர் கோயிலை கட்டியது. ஜம்மு காஷ்மீரில் 370 பிரிவை ரத்து செய்தது. குடியுரிமை திருத்த சட்டத்தை கொண்டு வந்தது. இப்போது 400 இடங்களுக்கு மேல் வென்றால் மதுராவில் உள்ள கிருஷ்ண ஜென்ம பூமியிலும், வாரணாசியில் ஞானவாபி மசூதி உள்ள இடத்திலும் கோயில் கட்டப்படும். அதேபோல் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்படும்” என்று தெரிவித்தார்.

The post பாஜ 400க்கு மேல் வென்றால் ஞானவாபி மசூதி இடத்தில் கோயில் கட்டப்படும்: அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: