தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை ஆந்திர தலைமை செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ்

புதுடெல்லி: ஆந்திராவில் மக்களவை தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோர் இன்று நேரில் ஆஜராக வேண்டும் என்று தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 13ம் தேதி மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. வாக்குப்பதிவுகள் முடிந்த பின்னர் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்தது. இதற்கு ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்கட்சியான தெலுங்கு தேசம் ஒருவர் மீது ஒருவர் குற்றம்சாட்டின. இந்நிலையில் தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை தொடர்பாக விளக்கமளிக்க கோரி தலைமை செயலாளர், டிஜிபி ஆகியோருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இருவரும் இன்று தேர்தல் ஆணையத்தின் தலைமையகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பிந்தைய வன்முறையை கட்டுப்படுத்துவதற்கு நிர்வாகம் தவறியதற்கான காரணங்களை தனிப்பட்ட முறையில் விளக்கம் கேட்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post தேர்தலுக்கு பின் நடந்த வன்முறை ஆந்திர தலைமை செயலாளர், டிஜிபிக்கு நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: