நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு நாளை முதல் 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது என கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு வரும் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு, நாளை முதல் 19ம் தேதி வரையிலும் மற்றும் 4.6.2024 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அன்று மட்டும் செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில் இயங்கி வருகின்ற தமிழ்நாடு அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் மற்றும் மதுபானக் கூடங்கள் மூடிட ஆணையிடப்படுகிறது. எனவே, அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் உரிமம் பெற்ற தனியார் மதுபான கடைகள் மற்றும் மதுபானக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் மூடல் appeared first on Dinakaran.

Related Stories: