செங்கல்பட்டில் பிக்பாக்கெட் திருடன் கைது

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பிக்பாக்கெட் திருடனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே தண்டரை பேட்டை பகுதியை சேர்ந்தவர் பரந்தாமன் (29). இவர், செங்கல்பட்டில் இருந்து மதுராந்தகம் செல்ல புதிய பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தில் ஏறியுள்ளார். அப்போது, கூட்ட நெரிசலை பயன்படுத்தி பரந்தாமன் பேன்ட் பாக்கெட்டில் இருந்த மணி பர்சை ஒருவர் எடுத்துள்ளார். தனது பேன்ட் பாக்கெட்டில் இருந்து தனது பர்சை எடுத்ததை உணர்ந்த பரந்தாமன் கூச்சலிட்டுள்ளார். அருகில் இருந்த பேருந்து பயணிகள் பிக் பாக்கெட் திருடனை கையும் களவுமாக பிடித்து செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

முதல் கட்ட விசாரணையில் பிக் பாக்கெட் திருடன் விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த கோவிந்தன் (40) என தெரியவந்தது. இதனை தொடர்ந்து, பரந்தாமன் கொடுத்த புகாரின்பேரில் செங்கல்பட்டு நகர போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர். கோவிந்தன் மீது சென்னை பிராட்வே மற்றும் தாம்பரம் ஆகிய காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

The post செங்கல்பட்டில் பிக்பாக்கெட் திருடன் கைது appeared first on Dinakaran.

Related Stories: