தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 28.5 கிலோ தங்கம் வாங்கி பணம் தராமல் மோசடி: சில்லரை வியாபாரிகளிடம் விசாரணை

வளசரவாக்கம்: தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 28.5 கிலோ தங்க காசுகள் வாங்கி விட்டு, அதற்கு பணம் தராமல் மோசடி செய்த கும்பகோணத்தை சேர்ந்த 2 சில்லரை நகை வியாபாரிகளிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர். தி.நகர் வடக்கு உஸ்மான் சாலையில் என்ஏசி ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற பெயரில் பிரபல நகைக்கடை இயங்கி வருகிறது. இந்த நிறுவன மேலாளர் சந்தோஷ்குமார் கடந்த 13ம் ேததி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரில், கும்பகோணம் ஸ்ரீநகர் காலனி தீத்தர் தோட்டம் 2வது தெருவை சேர்ந்த கணேஷ் மற்றும் அவரது சகோதரர் சுவாமிநாதன் ஆகியோர் தங்க நகைகளை சில்லரை வியாபாரம் ெசய்து வருகின்றனர்.
இவர்கள், கடந்த 14.7.2020 முதல் 31.12.2023 வரை எங்கள் கடையில் இருந்து 38.6 கிலோ மதிப்புள்ள தங்க காசுகள் வாங்கி சென்றனர்.

அதில் 9 கிலோ 475 கிராமுக்கு மட்டும் பணத்தை கொடுத்தனர். மீதமுள்ள 28 கிலோ 531 கிராம் தங்க காசுகளுக்கான பணத்தை கொடுக்காமல் ஏமாற்றி விட்டனர். எனவே அவர்களிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் கூறி இருந்தார். அதன் மீது நடவடிக்கை எடுக்க போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மத்திய குற்றப்பிரிவு கூடுதல் கமிஷனர் செந்தில்குமாரிக்கு உத்தரவிட்டார். அதன்படி போலீசார் விசாரணை நடத்திய போது, கும்பகோணத்தை சேர்ந்த சகோதரர்களான கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் என்ஏசி ஜூவல்லரியில் 38.6 கிலோ தங்க காசுகள் வாங்கியதில் 28 கிலோ 531 கிராம் தங்க காசுகளுக்கு பணம் தாராமல் ஏமாற்றியது உறுதியானது. அதைதொடர்ந்து, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கணேஷ் மற்றும் சுவாமிநாதன் ஆகியோர் மீது ஐபிசி 406, 420 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post தி.நகரில் உள்ள பிரபல நகைக்கடையில் 28.5 கிலோ தங்கம் வாங்கி பணம் தராமல் மோசடி: சில்லரை வியாபாரிகளிடம் விசாரணை appeared first on Dinakaran.

Related Stories: