மே 15ம் தேதி பதவி விலகுகிறார் சிங்கப்பூர் பிரதமர்

சிங்கப்பூர்: சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங் அடுத்த மாதம் 15ம் தேதி பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். சிங்கப்பூரின் 3வது பிரதமராக லீ சியான் லூங் கடந்த 2004ம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி பொறுப்பேற்றுக்கொண்டார். சுமார் 20 ஆண்டுகள் பிரதமராக இருந்த லீ அடுத்த மாதம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் லீ தனது பேஸ்புக் பதிவில், ‘‘ கடந்த நவம்பரில் நான் பதவியில் விலகுவது குறித்த எனது முடிவை அறிவித்தேன். மே 15ம் தேதி நான் பிரதமர் பதவியில் இருந்து விலகுகிறேன்.

அதே நாளில் துணை பிரதமரான லாரன்ஸ் வாங் அடுத்த புதிய பிரதமராக பதவியேற்றுக்கொள்வார்.எந்த நாட்டிலும் தலைமை மாற்றம் என்பது மிகவும் குறிப்பிடத்தக்க தருணமாகும். லாரன்ஸ் மற்றும் 4ஜி ( நான்காவது தலைமுறை) குழுவானது மக்களின் நம்பிக்கையை பெறுவதற்கு கடுமையாக உழைத்துள்ளனர். 4 ஜி குழுவானது சிங்கப்பூரை சிறப்பாக செயல்பட வைப்பதற்கும், முன்னேற்றுவதற்கும் உறுதி பூண்டுள்ளது. லாரன்ஸ் மற்றும் அவரது குழுவிற்கு மக்கள் முழு ஆதரவு வழங்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மே 15ம் தேதி பதவி விலகுகிறார் சிங்கப்பூர் பிரதமர் appeared first on Dinakaran.

Related Stories: