ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு

புதுடெல்லி: 18வது மக்களவை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சியின் 5 நீதிகள் அடங்கிய பிரசார பாடல் நேற்று வௌியிடப்பட்டது.  2024 மக்களவை தேர்தலையொட்டி தேசிய, மாநில கட்சிகள் பல்வேறு பிரசார முன்னெடுப்புகளை செய்து வருகின்றன. அதன்ஒரு பகுதியாக எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் பெண்களுக்கான நீதி, விவசாயிகளுக்கான நீதி, இளைஞர்களுக்கான நீதி, தொழிலாளர்களுக்கான நீதி மற்றும் உரிமை மறுக்கப்பட்டவர்களுக்கான நீதி ஆகிய 5 நீதிகளை உள்ளடக்கிய வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை கடந்த 5ம் தேதி வௌியிட்டது.

இந்நிலையில், “நாம் ஒன்றாக இருந்தால் இந்த நிலை மாறும்” என்ற முழக்கத்தை அடிப்படையாக கொண்ட பிரசார பாடலை காங்கிரஸ் கட்சி நேற்று வௌியிட்டது. டெல்லியிலுள்ள காங்கிரஸ் தலைமையகத்தில் காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ், செய்தி தொடர்பாளர் சுப்ரியா ஷ்ரினேட் ஆகியோர் கூட்டாக பிரசார பாடலை வௌியிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ராம் ரமேஷ், “காங்கிரசின் 5 நீதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை பார்த்து பாஜ குழப்பம் அடைந்துள்ளது. 8 கோடி வீடுகளுக்கு காங்கிரசின் உத்தரவாத அட்டைகள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் 80% உத்தரவாத அட்டைகள் தரப்பட்டு விட்டன” என்று கூறினார்.

The post ஒன்றாக நாம் இருந்தால் இந்த நிலை மாறும்: காங்கிரசின் பிரசார பாடல் வௌியீடு appeared first on Dinakaran.

Related Stories: