காய்கறி வாங்குவது போல் நடித்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.60 ஆயிரம் அபேஸ்

மாதவரம்: மார்க்கெட்டில் காய்கறி வாங்குவதுபோல் நடித்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.60 ஆயிரத்தை திருடி சென்ற இரண்டு பெண்களை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியைச் சேர்ந்தவர் காய்கறி வியாபாரி தங்கதுரை (75). இவர் அரும்பாக்கம் பகுதியில் உள்ள மார்க்கெட்டில் காய்கறி கடை வைத்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இவரது கடைக்கு காய்கறி வாங்குவதுபோல் வந்த இரண்டு பெண்கள், கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.60,000 பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து தங்கதுரை அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவான கட்சிகளை வைத்து திருட்டில் ஈடுபட்ட பெண்களை தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

The post காய்கறி வாங்குவது போல் நடித்து கல்லாப் பெட்டியில் இருந்த ரூ.60 ஆயிரம் அபேஸ் appeared first on Dinakaran.

Related Stories: