முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தீவிர வாக்கு சேகரிப்பு பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவேன்: தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி வாக்குறுதி

திருவள்ளூர்: நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நாளையுடன் முடிவடைவதால் அதிமுக கூட்டணி தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கு.நல்லதம்பியை ஆதரித்து நேற்று பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சிகளில் முன்னாள் அமைச்சர், அதிமுக மாவட்டச் செயலாளர் பி.வி.ரமணா, தேமுதிக மாவட்டச் செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர் ராமஞ்சேரி எஸ்.மாதவன் ஆகியோர் கொளுத்தும் வெயிலிலும் முரசு சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தனர்.

இந்த வாக்கு சேகரிப்பின் போது ஒன்றியக்குழு தலைவர் பி.வெங்கட்ரமணா, மாவட்ட துணைச் செயலாளர் கமாண்டோ ஏ.பாஸ்கரன், தேமுதிக மாவட்ட நிர்வாகிகள் ஆயில் கே.சரவணன், டி.கே.தியாகராஜன், அதிமுக ஒன்றிய அவைத்தலைவர் கந்தசாமி, ஒன்றிய துணை செயலாளர், ஒன்றிய கவுன்சிலர் பூண்டி வி.விஜி, மோகன்ராவ், எபிநேசன், அம்புரோஸ், சுஜாதா மணி, ராமதாஸ், ஹரிபாபு, பாலாஜி, சத்தியமூர்த்தி, தமிழ்ச்செல்வி, நெய்வேலி ஜெகநாதன், தேமுதிக ஒன்றிய செயலாளர் புதூர் ஜெ.பாலாஜி, குமரகுரு, நாகராஜ், ஹரி கிருஷ்ணன், மதியழகன், மணி, சுனிதா, மாவட்ட பிரதிநிதிகள் பிரபாகரன், பால்ராஜ், சண்முகம், சரவணன், புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் எறையூர் எஸ்.பார்த்திபன் வழக்கறிஞர் சுரேஷ், தேவா, சிவதாஸ், சாரதி, விஸ்வநாதன், முனுசாமி, ஸ்ரீதர், ஜஸ்டின், தமிழ், குமாரசாமி, கவிக்குமார், ஏழுமலை, புருஷோத்தமன், சித்தம் பிரகாஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு வாக்கு சேகரித்தனர்.

பிரசாரத்தில் வேட்பாளர் கு.நல்லதம்பி பேசியதாவது, எனக்கு முரசு சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்தால் பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவேன். 6 சட்டமன்ற தனியார் நிறுவனங்களின் மூலம் வேலை வாய்ப்பு முகாம்களை நடத்தி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத்தர தர முயற்சி செய்வேன். மாணவிகளுக்கு தனியாக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொண்டு வர முயற்சி செய்வேன். திருவள்ளூர் நாடாளுமன்றத் தொகுதி மக்களின் பிரச்னைகளை தீர்க்க போராடுவேன். பொதுமக்களின் கோரிக்கைகளை உடனுக்குடன் நிறைவேற்றித் தர பாடுபடுவேன் என வாக்குறுதி அளித்தார்.

The post முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா தீவிர வாக்கு சேகரிப்பு பூண்டி நீர்த்தேக்கத்தை சுற்றுலாத்தலமாக மாற்றுவேன்: தேமுதிக வேட்பாளர் கு.நல்லதம்பி வாக்குறுதி appeared first on Dinakaran.

Related Stories: