ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் உள்ள 17 இந்தியர்களை தாயகம் கொண்டு வர தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு

தூத்துக்குடி: ஈரான் சிறைபிடித்த இஸ்ரேல் சரக்குக் கப்பலில் தமிழர்கள் 3 பேர் இருப்பது தெரிய வந்துள்ளது. ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் உள்ள 17 இந்தியர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். தூத்துக்குடியைச் சேர்ந்த பிரைன்ஸ்டைன் கொந்தாஸ், புன்னக்காயலைச் சேர்ந்த மைக்கேல் ஆகியோர் இருப்பது தெரிய வந்துள்ளது. புன்னகாயல் கிராமத்தை சேர்ந்த 2 மாலுமிகள் உள்ளிட்ட 17 இந்திய மாலுமிகளை மீட்டு தாயகம் கொண்டு வர ஆலந்தலை கிராமத்தை சேர்ந்த கப்பல் மாலுமிகள் சங்கம் சார்பில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டை சேர்ந்த கப்பலில் ஹெலிகாப்டர் மூலம் ஈரான் கடற்படை இறங்கி அதிலிருந்த 25 மாலுமிகளை சிறைபிடித்தது. ஏப்.12-ல் ஐக்கிய அரபு அமீரக கடற்பகுதி வழியாக மும்பைக்கு சென்ற இஸ்ரேல் நாட்டின் கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்தது. இஸ்ரேல் உடனான மோதலில் அந்நாட்டு சரக்குக் கப்பலை ஈரான் கடற்படை சிறைபிடித்துள்ளது. ஈரான் – இஸ்ரேல் இடையே போர் பதற்றம் நீடிப்பதால் மாலுமிகளை பாதிப்பின்றி உடனே மீட்டு தாயகம் கொண்டு வர கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

The post ஈரான் கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட சரக்குக் கப்பலில் உள்ள 17 இந்தியர்களை தாயகம் கொண்டு வர தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு appeared first on Dinakaran.

Related Stories: