சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கம்..!!

வாஷிங்டன்: சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகளை அந்நிறுவனம் நீக்கியுள்ளது. எலோன் மஸ்க் தலைமையிலான மைக்ரோ பிளாக்கிங் தளமான எக்ஸ் கார்ப், இந்தியாவில் கடந்த ஏப்ரல் 26 முதல் மார்ச் 25-ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில் மட்டும் 212,627 இந்தியர்களின் நீக்கம் செய்துள்ளதாக எக்ஸ் தளத்தின் மாதாந்திர அறிக்கையில் அறிவித்துள்ளது. இந்த தடைகளில் பெரும்பாலானவை குழந்தைகளின் பாலியல் சுரண்டல் மற்றும் ஒருமித்த நிர்வாணத்தை ஊக்குவிப்பதன் காரணமாகும்.

பயங்கரவாதம் மற்றும் அத்துமீறல்கள் மீதான ஒடுக்குமுறை

பயங்கரவாதத்தை ஊக்குவிக்கும் குற்றச்சாட்டில் இந்தியாவில் 1,235 கணக்குகளை முடக்கியது. இந்த விரிவான நடவடிக்கை, ஆன்லைன் அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராடுவதற்கும், மேலும் பயனர் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எக்ஸ்தளம் முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து எக்ஸ் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில்,

எங்கள் தளத்தில் குழந்தைகள் ஆபாச விடியோ, பயங்கரவாதத்துக்கு ஊக்குவிக்கும் கணக்குகள் மீதான நடவடிக்கை எடுக்கும் நடைமுறை நீண்ட காலமாக நடைமுறையில் உள்ளது.

இந்திய பயனர்களிடம் இருந்து எக்ஸ் கணக்குகளின் மேல் 5,158 புகார்கள் பெறப்பட்டு, அதன் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடந்த மாதத்தில் நீக்கம் செய்யப்பட்ட கணக்குகளில் 86 பேர் நீக்கத்துக்கு எதிராக எங்களிடம் முறையிட்டனர். அதில், 7 கணக்குகளின் விளக்கம் ஏற்கப்பட்டு நீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ளது.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2 லட்சம் இந்தியர்களின் கணக்குகள் நீக்கம்..!! appeared first on Dinakaran.

Related Stories: